Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

எங்கே சுமந்து போகிறீர்?


    • எங்கே சுமந்து போகிறீர்?
    • பல்லவி 
    • எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்
    • எங்கே சுமந்து போகிறீர்? 

    • சரணங்கள்
    • 1. எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உம
    • தங்க முழுவதும் நோக ஐயா , என் யேசுநாதா --- எங்கே

    • 2. தோளில் பாரம் அழுத்த , தூக்கப் பெலமில்லாமல்
    • தாளும் தத்தளிக்கவே , தாப சோபம் உற நீர் --- எங்கே

    • 3. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக ,
    • பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கிவர --- எங்கே

    • 4. தாயார் அழுதுவர சார்ந்தவர் பின்தொடர
    • மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பிவர --- எங்கே

    • 5. வல்லபேயைக் கொல்லவும் , மரணந்தனை வெல்லவும்
    • எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும் --- எங்கே

    • 6. வண்டக் கள்ளர் நடுவில் மரத்தில் தொங்குவதற்கோ
    • சண்டாளர்களைத் தூக்கும் தலையோட்டு மேட்டுக்கோ --- எங்கே

    • 7. மாசணுகாத சத்திய வாசகனே , உமது
    • தாசர்களைக் காக்கவும் தாங்காத சுமையை எடுத்து --- எங்கே

  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 277 times