Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

எந்தன் அன்புள்ள ஆண்டவர்


    • எந்தன் அன்புள்ள ஆண்டவர்
    • 1. எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான்
    • உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்
    • உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில் அறிந்திடேன்
    • உயிர் தந்த தெய்வம் நீரே 

    • பல்லவி
    • ஆ! ஆனந்தம் ஆனந்தமே
    • அல்லும் பகலிலும் பாடிடுவேன்
    • இயேசுவே எந்தன் ஆருயிரே 

    • 2. பெற்ற தாயும் என் தந்தையுமானவரே
    • மற்றும் எல்லாம் எனக்கு நீரே
    • வானம் பூமியும் யாவுமே மாறிடினும் நீரோ
    • வாக்கு மாறாதவரே

    • 3. உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே
    • உந்தன் நாமத்தை நம்பிடுவேன்
    • உம்மையல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன்
    • உயிருள்ள தெய்வம் நீரே

    • 4. எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவே
    • தந்த வாலிப நாட்களிலே
    • இந்த மாய உலகத்தை வெறுத்திட அளித்தீரே
    • பரிசுத்த ஜீவியமே

    • 5. பொன் வெள்ளியுமோ பெரும் பேர் புகழோ
    • பண ஆஸ்தியும் வீண் அல்லவோ
    • பரலோகத்தின் செல்வமே என் அருள் இயேசுவே
    • போதும் எனக்கு நீரே
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 667 times