Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

எனக்காய் ஜீவன் விட்டவரே


    • எனக்காய் ஜீவன் விட்டவரே
    • 1. எனக்காய் ஜீவன் விட்டவரே
    • என்னோடிருக்க எழுந்தவரே
    • என்னை என்றும் வழி நடத்துவாரே
    • என்னைச் சந்திக்க வந்திடுவாரே 

    • பல்லவி
    • இயேசு போதுமே இயேசு போதுமே
    • எந்த நாளிலுமே எந்நிலையிலுமே
    • எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே 

    • 2. பிசாசின் சோதனை பெருகிட்டாலும்
    • சோர்ந்து போகாமல் முன் செல்லவே
    • உலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும்
    • மயங்கிடாமல் முன்னேறவே --- இயேசு

    • 3. புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
    • அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்
    • ஆத்துமாவைத் தினம் தேற்றிடுவார்
    • மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார் --- இயேசு

    • 4. மனிதர் என்னைக் கைவிட்டாலும்
    • மாமிசம் அழுகி நாறிட்டாலும்
    • ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும்
    • ஆகாதவன் என்று தள்ளிவிட்டாலும் --- இயேசு

  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 12178 times