Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

கடல் கொந்தளித்துப் பொங்க


    • கடல் கொந்தளித்துப் பொங்க
    • 1. கடல் கொந்தளித்துப் பொங்க
    • கப்பல் ஆடிச் செல்கையில்
    • புயல் காற்று சீறி வீச
    • பாய் கிழிந்து போகையில்
    • இயேசு எங்களிடம் வந்து
    • கப்பலோட்டியாயிரும்
    • காற்றமைத்துத் துணை நின்று
    • கரை சேரச் செய்திடும்

    • 2. கப்பலிலே போவோருக்கு
    • கடும் மோசம் வரினும்
    • இடி , மின் முழக்கம் காற்று
    • உமக்கெல்லாம் அடங்கும்
    • இருளில் நீர் பரஞ்சோதி
    • வெயிலில் நீர் நிழலே
    • யாத்திரையில் திசை காட்டி
    • சாவில் எங்கள் ஜீவனே

    • 3. எங்கள் உள்ளம் உம்மை நோக்கும்
    • இன்ப துன்ப காலத்தில்
    • எங்கள் ஆவி உம்மில் தங்கும்
    • இகபர ஸ்தலத்தில்
    • இயேசு எங்களிடம் வந்து
    • கப்பலோட்டியாயிரும்
    • காற்றமைத்துத் துணை நின்று
    • கரை சேரச் செய்திடும்

  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 668 times