Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

கர்த்தரின் சத்தம்


    • கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
    • பல்லவி 
    • கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
    • கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது
    • திரண்ட தண்ணீர் மேல் ஜலப் பிரவாகம் மேல்
    • தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா! 

    • சரணங்கள்
    • 1. பலவான்களின் புத்திரரே
    • பரிசுத்த அலங்காரமாய்
    • கனம் , வல்லமை , மகிமை
    • கர்த்தருக்கே செலுத்திடுங்கள்
    • பிதா , குமாரன் பரிசுத்தாவியின்
    • புதிய ஆசீர்வாதம் பெருக --- கர்த்தரின்

    • 2. கேதுரு மரங்களையும்
    • லீபனோனின் மரங்களையும்
    • கர்த்தரின் வலிய சத்தம்
    • கோரமாக முறிக்கின்றது
    • சேனை அதிபன் நமது முன்னிலை
    • ஜெய வீரனாகச் செல்கின்றார் --- கர்த்தரின்

    • 3. அக்கினி ஜுவாலைகளை
    • அவர் சத்தம் பிளக்கின்றது
    • காதேஸ் வனாந்திரத்தை
    • கர்த்தர் சத்தம் அதிரப்பண்ணும்
    • ராஜாவாகவே கர்த்தர் வீற்றிருப்பார்
    • ராஜரீக மெங்கும் ஜொலிக்கும் --- கர்த்தரின்

    • 4. பெண்மான்கள் ஈனும்படி
    • பெலத்த கிரியை செய்திடும்
    • காட்டையும் வெளியாக்கும்
    • கர்த்தரின் வலிய சத்தம்
    • பெலன் கொடுத்து சமாதானமீந்து
    • பரன் எம்மை ஆசீர்வதிப்பார் --- கர்த்தரின்
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 894 times