Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

அரசனைக்


    • அரசனைக் காணமலிருப்போமோ?
    • பல்லவி
    • அரசனைக் காணமலிருப்போமோ? - நமது
    • ஆயுளை வீணாகக் கழிப்போமோ? 

    • அனுபல்லவி
    • பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ? - யூதர்
    • பாடனு பவங்களை ஒழிப்போமோ? - யூத


    • சரணங்கள்
    • 1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, - இஸ்ரேல்
    • ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே,
    • ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்
    • தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே! - யூத --- அரசனை

    • 2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார்! - மேற்குத்
    • திசை வழி காட்டிமுன் செல்லுது பார்!
    • பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே -அவர்
    • பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே! - யூத --- அரசனை

    • 3. அலங்காரமனை யொன்று தோணுது பார்! - அதன்
    • அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்!
    • இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார்! - நாம்
    • எடுத்த கருமம் சித்தியாகிடும் பார்! - யூத --- அரசனை

    • 4. அரமனையில் அவரைக் காணோமே! - அதை
    • அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே!
    • மறைந்த உடு அதோ! பார் திரும்பினதே, - பெத்லேம்
    • வாசலில் நமைக் கொண்டு சேர்க்குது பார்! - யூத --- அரசனை

    • 5. பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே, - ராயர்
    • பொற்கழல் அர்ச்சனை புரிவோமே!
    • வன்கண்ணன் ஏரோதைப் பாராமல், - தேவ
    • வாக்கினால் திரும்பினோம் சோராமல், - யூத --- அரசனை
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 692 times