Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

என் மீட்பர் உயிரோடி


    • என் மீட்பர் உயிரோடிருக்கையிலே 
    • பல்லவி
    • என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்
    • கென்ன குறைவுண்டு ? நீ சொல் , மனமே 

    • சரணங்கள்
    • 1. என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர் , 
    • என்னோடிருக்கவே எழுந்திருந்தோர் ; 
    • விண்ணுல குயர்ந்தோர் , உன்னதஞ்சிறந்தோர் ,
    • மித்திரனே சுகபத்திர மருளும் --- என் மீட்பர்

    • 2. பாபமோ , மரணமோ , நரகமோ ,பேயோ , 
    • பயந்து நடுங்கிட ஜெயஞ் சிறந்தோர் ,
    • சாபமே தீர்த்தோர் சற்குருநாதன் ;
    • சஞ்சலமினியேன் ? நெஞ்சமே , மகிழாய் --- என் மீட்பர்

    • 3. ஆசி செய்திடுவார் , அருள்மிக அளிப்பார் ,
    • அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார் ;
    • மோசமே மறைப்பார் , முன்னமே நடப்பார் ;
    • மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும் --- என் மீட்பர்

    • 4. கவலைகள் தீர்ப்பார் , கண்ணீர் துடைப்பார் ,
    • கடைசிமட்டுங் கைவிடா திருப்பார் ;
    • பவமனிப்பளிப்பார் , பாக்கியங் கொடுப்பார் ,
    • பரம பதவியினுள் என்றனை எடுப்பார் --- என் மீட்பர்

    • 5. போனது போகட்டும் , புவிவசை பேசட்டும் ,
    • பொல்லான் அம்புக ளெய்திடட்டும் ,
    • ஆனது ஆகட்டும் , அருள்மழை பெய்திடும் ,
    • அன்புமிகும் பேரின்ப மெனக்கருள் --- என் மீட்பர்

    • toilax 5mg bhalsbrand.site toilax spc
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 313 times