Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

என்னை ஜீவபலியாய்


    • என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன்
    • பல்லவி
    • என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன் ,
    • ஏற்றுக் கொள்ளும் , யேசுவே 

    • அனுபல்லவி
    • அன்னை தந்தை உந்தம் சன்னதி முன்னின்று
    • சொன்ன வாக்குத்தத்த மல்லாது , இப்போது --- என்னை 

    • சரணங்கள்
    • 1. அந்தகாரத்தி னின்றும் , பவப் பேய்
    • அடிமைத் தனத்தி னின்றும் ,
    • சொந்த ரத்தக் கிரயத்தால் எனைமீட்ட
    • எந்தையே , உந்தனுக்கிதோ ! படைக்கிறேன் --- என்னை

    • 2. ஆத்ம சரீரமதை உமக்கு
    • ஆதீன மாக்கி வைத்தேன் ;
    • பாத்ரமதாய் அதை பாவித்துக் கொள்ளக்
    • காத்திருக்கின்றேன் ; கருணைசெய் , தேவா --- என்னை

    • 3. நீதியி னாயுதமாய் அவயவம்
    • நேர்ந்து விட்டேன் உமக்கு ;
    • ஜோதி பரிசுத்த ராலய மாகவே
    • சொந்தமாய்த் தந்தேன் என்றன் சரீரத்தை --- என்னை

  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 267 times