Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

என்ன பாக்கியம்


    • என்ன பாக்கியம்
    • பல்லவி
    • என்ன பாக்கியம், எவர்க்குண்டு
    • இந்தச் சிலாக்கியம்? 

    • அனுபல்லவி
    • விண்ணவரும், புவிமேவும் முனிவர்களும்,
    • மன்னவருங் காணா மகிபனை யான் கண்டேன் --- என்ன 

    • சரணங்கள்
    • 1. வானகந் தானோ - அல்லதிது – வையகந் தானோ?
    • ஆனகம் சென்று எழுந்த அரும்பொருள்
    • கானகந் தன்னில் என் கையில் அமர்ந்தது --- என்ன

    • 2. சாமியைக் கண்டேன் - மகானந்தம் - சாலவுங்கொண்டேன்,
    • காமரு தேங்கனி வாய்கள் துடிப்பதும், 
    • கண்ணும் மனமும் களிக்க விழிப்பதும் --- என்ன

    • 3. அன்னமும் நீயே - கிடைத்தற்கருஞ் சொன்னமும் நீயே;
    • மின்னறு மேகத் திருக்கை துறந்தையோ?
    • மேதினி தன்னை ரட்சிக்கப் பிறந்தையோ? --- என்ன

    • 4. போதும் இவ்வாழ்வு - பரகதி - போவேன் இப்போது;
    • ஏதேன் என்ற பரதீசும் வந்திட்டது;
    • எண்ணில்லாத செல்வம் என் கையில் கிட்டுது --- என்ன
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 317 times