Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

இயேசுவின் நாமமே திருநாமம்


    • இயேசுவின் நாமமே திருநாமம் 
    • பல்லவி
    • இயேசுவின் நாமமே திருநாமம் - முழு
    • இருதயத்தால் தொழுவோம் நாமும்

    • சரணங்கள்
    • 1. காசினியில் அதனுக் கிணையில்லையே - விசு 
    • வாசித்த பேர்களுக்குக் குறையில்லையே --- இயேசு

    • 2. இத்தரையில் மெத்தவதி சயநாமம் - அதை 
    • நித்தமுந் தொழுபவர்க்கு ஜெயநாமம் --- இயேசு

    • 3. உத்தம மகிமைப் பிரசித்த நாமம் - இது
    • சத்திய விதேய மனமொத்த நாமம் --- இயேசு

    • 4. விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும் நாமம் - நமை
    • அண்டிடும்பேய் பயந்தோடு தேவநாமம் --- இயேசு

    • 5. பட்சமுள்ள ரட்சைசெயு முபகாரி - பெரும்
    • பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி --- இயேசு

  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 2481 times