Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

எங்கே சுமந்து போகிறீர் ?


    • எங்கே சுமந்து போகிறீர் ? 
    • பல்லவி
    • எங்கே சுமந்து போகிறீர் ? சிலுவையை நீர்
    • எங்கே சுமந்து போகிறீர் ? 

    • சரணங்கள்
    • 1. எங்கே சுமந்து போறீர் ? இந்தக் கானலில் உமது 
    • அங்கம் சுமந்து நோக , ஐயா , என் ஏசுநாதா --- எங்கே 

    • 2. தோளில் பாரம் அழுத்த , தூக்கப் பெலம் இல்லாமல் , 
    • தாளுந் தத்தளிக்கவே , தாப சோபம் உற , நீர்--- எங்கே 

    • 3. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக , 
    • பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கிவர --- எங்கே 

    • 4. தாயார் அழுதுவர சார்ந்தவர் பின் தொடர , 
    • மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர --- எங்கே 

    • 5. வல்ல பேயைக் கொல்லவும் , மரணந்தனை வெல்லவும் , 
    • எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும்--- எங்கே 

    • 6. மாசணுகாத சத்திய வாசகனே , உமது 
    • தாசர்களைக் காக்கவும் தாங்காச் சுமையை எடுத்து --- எங்கே 

    • rigevidon reddit rigevidon risks rigevidon quantity
      methotrexat grapefruit methotrexat folsyre methotrexat 7 5
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 350 times