Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

எந்நாளுமே துதிப்பாய்


    • எந்நாளுமே துதிப்பாய்
    • பல்லவி
    • எந்நாளுமே துதிப்பாய் - என்னாத்துமாவே , நீ
    • எந்நாளுமே துதிப்பாய் ! 

    • அனுபல்லவி
    • இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த ;
    • எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது --- எந்நாளுமே 

    • சரணங்கள்
    • 1. பாவங்கள் எத்தனையோ - நினையா திருத்தாருன்
    • பாவங்கள் எத்தனையோ ?
    • பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
    • பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி --- எந்நாளுமே

    • 2. எத்தனையோ கிருபை - உன்னுயிர்க்குச் செய்தாரே
    • எத்தனையோ கிருபை ?
    • நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி ,
    • நேயமதாக ஜீவனை மீட்டதால் --- எந்நாளுமே

    • 3. நன்மையாலுன் வாயை - நிறைத்தாரே , பூர்த்தியாய்
    • நன்மையாலுன் வாயை ;
    • உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு ,
    • ஓங்கு இளமைபோ லாகவே செய்ததால் --- எந்நாளுமே

    • 4. பூமிக்கும் வானத்துக்கும் - உள்ள தூரம் போலவே ,
    • பூமிக்கும் வானத்துக்கும் ;
    • சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
    • சாலவும் தங்குமே , சத்திய மேயிது --- எந்நாளுமே

    • 5. மன்னிப்பு மாட்சிமையாம் - மாதேவனருளும்
    • மன்னிப்பு மாட்சிமையாம் ;
    • எண்ணுவாயோ கிழக்கு மேற்கின் தூரமே ?
    • எண்ணில் உன்பாவம் அகன்றதத்தூரமே --- எந்நாளுமே

    • 6. தந்தைதன் பிள்ளைகட்கு - தயவோ டிரங்கானோ
    • தந்தைதன் பிள்ளைகட்கு ?
    • எந்த வேளையும் அவரோடு தங்கினால் ,
    • சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே --- எந்நாளுமே
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 9764 times