Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

எழுந்தார் இறைவன்


    • எழுந்தார் இறைவன்
    • பல்லவி
    • எழுந்தார் இறைவன் - ஜெயமே ஜெயமெனவே
    • எழுந்தார் இறைவன்

    • சரணங்கள்
    • 1. சாவின் பயங்கரத்தை ஒழிக்கக் - கெட்ட 
    • ஆவியின் வல்லமையை அழிக்க - இப் 
    • பூவின்மீது சபை செழிக்க --- எழுந்தார்

    • 2. செத்தவர் மீண்டுமே பிழைக்க - உயர் 
    • நித்திய ஜீவனை அளிக்கத் - தேவ
    • பக்தர் யாவரும் களிக்க --- எழுந்தார்

    • 3. விழுந்தவரைக் கரையேற்றப் - பாவத்
    • தெழுந்து மனுக்குலத்தை மாற்ற - விண்ணுக்
    • கெழுந்து நாம் அவரையே போற்ற --- எழுந்தார்

    • 4. கருதிய காரியம் வாய்க்கத் - தேவ
    • சுருதி மொழிகளெல்லாம் காக்க - நம்
    • இரு திறத்தாரையும் சேர்க்க --- எழுந்தார்
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 323 times