Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

என்ன என் ஆனந்தம்


    • என்ன என் ஆனந்தம் 
    • பல்லவி
    • என்ன என் ஆனந்தம் ! என்ன என் ஆனந்தம் !
    • இயம்பலாகாதே ,
    • மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்
    • மன்னித்து விட்டாரே. 

    • சரணங்கள்
    • 1. கூடுவோம் , ஆடுவோம் , பாடுவோம் , நன்றாய் 
    • மகிழ் கொண்டாடுவோம் ; 
    • நாடியே நம்மைத் தேடியே வந்த
    • நாதனைப் போற்றிடுவோம்.

    • 2. பாவங்கள் , சாபங்கள் , கோபங்கள் எல்லாம் 
    • பரிகரித்தாரே ;
    • தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
    • தேற்றியே விட்டாரே.

    • 3. அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு ,
    • அருளினதாலே ,
    • நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி
    • பகர வேண்டியதே.

    • 4. வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல் வீட்டில்
    • ஜெயக் கொடியுடனே ,
    • மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற
    • மன்னனைத் தோத்தரிப்போம்.

  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 360 times