Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

எனது கர்த்தரின் ராஜரீக நாள்


    • எனது கர்த்தரின் ராஜரீக நாள்
    • பல்லவி
    • எனது கர்த்தரின் ராஜரீக நாள் 
    • எப்போ வருகுமோ ?
    • ஏங்கும் என் கலி நீங்க மகிழ்ச்சி
    • எப்போ பெருகுமோ ? 

    • அனுபல்லவி
    • மனிதசுதனின் அடையாளம் விண்ணில் காணும் , என்றாரே ,
    • வல்லமையோடு மகிமையாய்த் தோன்றி வருவேன் என்றாரே --- எனது 

    • சரணங்கள்
    • 1. தேவ தூதரின் கடைசி எக்காளம் தொனி முழங்கவே ,
    • ஜெகத்தில் ஏசுவைப் பற்றி மரித்தோர் உயிர்த்தெழும்பவே ,
    • ஜீவனுள்ளோறும் அவருடன் மறு ரூபமாகவே ,
    • ஜெகத்தில் பக்தர்கள் கர்த்தரிடத்துக் கெழுந்து போகவே --- எனது

    • 2. தூதர் எக்காளத் தொனியில் என்னிடம் சேர்ப்பேன் என்றாரே ;
    • சோதனை காலந்தனில் தப்பவுன்னைக் காப்பேன் என்றாரே ;
    • பாதக மனுஜாதி வேதனை அடையும் என்றாரே ;
    • பாவ மனுசன் தோன்றி நாசமாய்ப் போவான் என்றாரே --- எனது

    • 3. எருசலேமி லிருந்து ஜீவ நதிகள் ஓடுமே ,
    • ஏழைகள் மன மகிழ்ந்து கர்த்தரை ஏந்திப் பாடுமே ;
    • வருஷமாயிரம் அளவும் பூமியில் பலன்கள் நீடுமே ;
    • வானராச்சிய சேனைகள் யாவும் வந்து கூடுமே --- எனது

    • 4. சஞ்சலங்களும் தவிப்புகள் யாவும் ஓடிப் போகுமே ;
    • சந்தோஷத்தோடு மகிழ்ச்சியும் வந்து சார்ந்து பிடிக்குமே ;
    • நெஞ்ச மகிழ்ந்து நீதிமான்களின் வாய் துதிக்குமே ;
    • நித்திய ஜீவனைப் பெற என்றன் மனம் துடிக்குமே --- எனது

    • methotrexat grapefruit methotrexat 30 mg methotrexat 7 5
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 355 times