Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஐயையா, நான் ஒரு மாபாவி


    • ஐயையா, நான் ஒரு மாபாவி
    • பல்லவி
    • ஐயையா, நான் ஒரு மாபாவி - என்னை
    • ஆண்டு நடத்துவீர், தேவாவி! 

    • சரணங்கள்
    • 1. மெய் ஐயா, இது தருணம், ஐயா - என்றன்
    • மீதிலிரங்கச் சமயம் ஐயா
    • ஐயையா, இப்போ தென்மேல் இரங்கி - வெகு
    • அவசியம் வரவேணும், தேவாவி! --- ஐயையா

    • 2. எனதிருதயம் பாழ்நிலமாம் - ஏழை
    • என்னைத் திருத்தி நீர் அன்பாகத்
    • தினமும் வந்து வழி நடத்தும் - ஞான
    • தீபமே, உன்னத தேவாவி! --- ஐயையா

    • 3. ஆகாத லோகத்தின் வாழ்வை எல்லாம் - தினம்
    • அருவருத்து நான் தள்ளுதற்கு
    • வாகன சத்த மனம் தருவீர் - நீர்
    • வல்லவராகிய தேவாவி! --- ஐயையா

    • 4. பத்தியின் பாதை விலகாமல் - கெட்ட
    • பாவத்தில் ஆசைகள் வையாமல்
    • சத்திய வேதப்படி நடக்க - என்னைத்
    • தாங்கி நடத்திடும், தேவாவி! --- ஐயையா

    • 5. அன்பு, பொறுமை, நற்சந்தோஷம் - என்
    • ஆண்டவரின் மேல் விசுவாசம்,
    • இன்பமிகு மெய்ச் சமாதானம் - இவை
    • யாவும் தருவீரே, தேவாவி! --- ஐயையா

    • 6. ஏசுகிறிஸ்துவில் நான் சார்ந்து - அவர்
    • இடத்திலேயே நம்பிக்கை வைக்க,
    • மாசில்லாத் துய்யனே, வந்துதவும் - நீர்
    • வராமல் தீராதே, தேவாவி! --- ஐயையா
    • toilax 5mg bhalsbrand.site toilax spc
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 243 times