Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஐயையா, நான் வந்தேன்


    • ஐயையா, நான் வந்தேன்

    • பல்லவி
    • ஐயையா, நான் வந்தேன் - தேவ
    • ஆட்டுக்குட்டி, வந்தேன் 

    • சரணங்கள்
    • 1. துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்
    • துஷ்டன் எனை அழைத்தீர் - தயை
    • செய்வோம் என்றே இதை அல்லாது போக்கில்லை
    • தேவாட்டுக்குட்டி, வந்தேன் --- ஐயையா

    • 2. உள்ளக் கறைகளில் ஒன்றேனம் தானாய்
    • ஒழிந்தால் வருவேன், என்று நில்லேன்
    • தெள் உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்
    • தேவாட்டுக்குட்டி, வந்தேன் --- ஐயையா

    • 3. எண்ணம், வெளியே போராட்டங்கள், உட்பயம்
    • எத்தனை, எத்தனையோ! இவை
    • திண்ணம் அகற்றி எளியனை ரட்சியும்
    • தேவாட்டுக்குட்டி, வந்தேன் --- ஐயையா

    • 4. ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்து சுத்திகரித்
    • தென்னை அரவணையும் - மனம்
    • தேற்றிக்கொண்டேன் உந்தம் வாக்குத் தத்தங்களால்
    • தேவாட்டுக்குட்டி, வந்தேன் --- ஐயையா

    • 5. மட்டற்ற உம் அன்பினால் தடை எதும்
    • மாறி அகன்றதுவே - இனி
    • திட்டமே உந்தம் உடைமை யான் என்றென்றும்
    • தேவாட்டுக்குட்டி, வந்தேன் --- ஐயையா
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 826 times