Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஒருபோதும் மறவாத


    • ஒருபோதும் மறவாத
    • பல்லவி
    • ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க,
    • உனக்கென்ன குறை மகனே? 

    • அனுபல்லவி
    • சிறுவந்தொட்டுனை யொரு
    • செல்லப் பிள்ளைபோற் காத்த
    • உரிமைத் தந்தை யென்றென்றும்
    • உயிரோடிப்பாருன்னை --- ஒருபோதும் 

    • சரணங்கள்
    • 1. கப்பலினடித் தட்டில் - களைப்புடன் தூங்குவார்,
    • கதறுமுன் சத்தங்கேட்டால் - கடல் புசலமர்த்துவார்,
    • எப்பெரிய போரிலும் - ஏற்ற ஆயுதமீவார்,
    • ஏழைப்பிள்ளை உனக்கு - ஏற்ற தந்தை நானென்பார் --- ஒருபோதும்

    • 2. கடல் தனக் கதிகாரி - கர்த்தரென் றறிவாயே,
    • கடவாதிருக்க வெல்லை - கற்பித்தாரவர்சேயே,
    • விடுவாளோ பிள்ளையத் தாய் - மேதினியிற்றனியே?
    • மெய்ப் பரனை நீ தினம் - விசுவாசித்திருப்பாயே --- ஒருபோதும்

    • 3. உன்னாசை விசுவாசம் - ஜெபமும் வீணாகுமா?
    • உறக்க மில்லாதவர் கண் - உன்னைவிட டொழியுமா?
    • இந்நில மீதிலுனக் - கென்னவந்தாலும் சும்மா
    • இருக்குமா அவர்மனம்? - உருக்கமில்லாதே போமா? --- ஒருபோதும்

    • 4. உலகப் பேயுடலாசை - உன்னை மோசம் செய்யாது,
    • ஊக்கம் விடாதே திரு - வுளமுனை மறவாது,
    • இலகும் பரிசுத்தாவி - எழில் வரம் ஒழியாது,
    • என்றும் மாறாத நண்பன் - இரட்சகருடன் சேர்ந்து --- ஒருபோதும்

  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 858 times