Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஐயனே! உமதுதிருவடி களுக்கே


    • ஐயனே! உமதுதிருவடி களுக்கே

    • 1. ஐயனே! உமதுதிருவடி களுக்கே
    • ஆயிரந்தரந் தோத்திரம்!
    • மெய்யனே! உமது தயைகளை அடியேன்
    • விவரிக்க எம்மாத்திரம்?

    • 2. சென்றதாம் இரவில் தேவரீனென்னைச்
    • சேர்த்தரவணைத்தீரே;
    • அந்தடைவாயிப் பகலிலுங் கிருபை
    • யாகவா தரிப்பீரே

    • 3. இருதயந் தனை நீர் புதியதே யாக்கும்
    • ஏழையைக் குணமாக்கும்
    • கருணையாய் என்னை உமதகமாக்கிக்
    • கன்மமெல்லாம் போக்கும்

    • 4. நாவிழி செவியை, நாதனே, இந்த
    • நாளெல்லாம் நீர் காரும்,
    • தீவினை விலகிநான் திருமுகம் நோக்க,
    • தெய்வமே, அருள்கூரும்

    • 5. கைகாலால் நான் பவம்புரி யாமல்
    • சுத்தனே துணை நில்லும்
    • துய்யனே, உம்மால் தான் எனதிதயம்
    • தூய்வழியே செல்லும்

    • 6. ஊழியந் தனைநான் உண்மையாச் செய்ய
    • உதவி நீர் செய்வீரே
    • ஏழைநான் உமக்கே இசையநல் ஆவி
    • இன்பமாய்ப் பெய்வீரே

    • 7. அத்தனே! உமது மகிமையை நோக்க,
    • அயலான் நலம்பார்க்கச்
    • சித்தமாய் அருளும், மெய்விசுவாசம்,
    • தேவனே உமக்கேற்க

    • 8. இன்றும் என் மீட்பைப் பயம் நடுக்கத்தோ
    • டேயடியேன் நடத்தப் 
    • பொன்றிடா பலமே தாரும், என் நாளைப்
    • பூவுலகில் கடத்த 

    • 9. இந்த நாளிலுமே திருச்சபை வளர
    • ஏகா தயைகூரும்
    • தந்தையே, நானதற் குதவியாயிருக்கத்
    • தற்பரா வரந்தாரும் 

    • toilax 5mg toilax 01 toilax spc
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 249 times