Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

நம்பிவந்தேன் மேசியா


    • நம்பிவந்தேன் மேசியா, நான் நம்பிவந்தேனே 

    • பல்லவி
    • நம்பிவந்தேன் மேசியா, நான் நம்பிவந்தேனே - திவ்ய
    • சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான் நம்பிவந்தேனே 

    • சரணங்கள்
    • 1. தம்பிரான் ஒருவனே, தஞ்சமே தருவனே - வரு
    • தவிது குமர குரு பரமனுவேலே, நம்பிவந்தேனே --- நான்

    • 2. நின்பாத தரிசனம் அன்பான தரிசனம் - நித
    • நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பிவந்தேனே --- நான்

    • 3. நாதனே, கிருபைகூர், வேதனே, சிறுமைதீர் - அதி
    • நலம் மிகும் உனதிரு திருவடி அருளே நம்பிவந்தேனே --- நான்

    • 4. பாவியில் பாவியே, கோவியில் கோவியே - கன
    • பரிவுடன் அருள்புரி, அகல விடாதே, நம்பிவந்தேனே --- நான்

    • 5. ஆதி ஓலோலமே பாதுகா காலமே - உன
    • தடிமைகள் படுதுயர் அவதிகள் மெத்த நம்பிவந்தேனே --- நான்

  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 93 times