Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

விந்தை கிறிஸ்தேசு ராசா!


    • விந்தை கிறிஸ்தேசு ராசா!

    • பல்லவி
    • விந்தை கிறிஸ்தேசு ராசா!
    • உந்தஞ் சிலுவை என் மேன்மை 

    • அனுபல்லவி
    • சுந்தரம் மிகும் இந்தப் பூவில்
    • எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் --- விந்தை 

    • சரணங்கள்
    • 1. திரண்ட செல்வம் , உயர்ந்த கல்வி ,
    • செல்வாக்குகள் மிக விருந்தாலும் ,
    • குருசை நோக்கிப் பார்க்க எனக்கு
    • உரிய பெருமை யாவும் அற்பமே --- விந்தை

    • 2. உம் குருசே ஆசிக்கெல்லாம்
    • ஊற்றாம் , வற்றா ஜீவநதியாம்;
    • துங்க இரத்த ஊற்றில் மூழ்கித்
    • தூய்மையடைந்து மேன்மையாகினேன் --- விந்தை

    • 3. சென்னி , விலா , கை கானின்று
    • சிந்துததோ! துயரோடன்பு;
    • மன்னா , இதைப் போன்ற காட்சி
    • எந்நாளிலுமே எங்கும் காணேன் --- விந்தை

    • 4. இந்த விந்தை அன்புக் கீடாய்
    • என்ன காணிக்கை ஈந்திடுவேன்;
    • எந்த அரும் பொருள் ஈடாகும்?
    • என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் --- விந்தை
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 101 times