Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

கதிரவன் எழுகின்ற காலையில்


    • கதிரவன் எழுகின்ற காலையில்
    • 1. கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்
    • துதி செய்ய மனமே - எழுந்திராய்.

    • 2. வறண்டு தண்ணீர் அற்ற வனம் இந்தப் புவிதனில்
    • திரண்ட தயை தேவை- நாடுவேன்.

    • 3. கடவுளின் வல்லமை,கன மகிமை காணும் 
    • இடமதில் செல்வதே - என் இஷ்டம்.

    • 4. ஜீவனைப் பார்க்கிலும் தேவனின் காதலை
    • ஆவலாய் நாடி நான் - போற்றுவேன்.

    • 5. ஆயுள் பரியந்தம் ஆண்டவர் நாமத்தை
    • நேயமாய் பாடி நான் - உயர்த்துவேன்.

    • 6. மெத்தையில் ராச்சாமம் நித்திரை கொள்கையில் 
    • கர்த்தரின் செயல்களை - சிந்திப்பேன்.

    • 7. அல்லும் பகலும் நான் அவர் செட்டைகளின் கீழ்த் 
    • தொல்லைக்கு நீங்கியே - ஒதுங்குவேன்.

    • 8. ஆத்துமம் தேவனை அண்டிக் கொள்ள அவர்
    • நேத்திரம்போல் என்னைக் - காக்கிறார்.

    • rigevidon reddit rigevidon risks rigevidon quantity
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 179 times