Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

கிஞ்சிதமும் நெஞ்சே


    • கிஞ்சிதமும் நெஞ்சே, அஞ்சிடாதே
    • பல்லவி
    • கிஞ்சிதமும் நெஞ்சே, அஞ்சிடாதே - நல்ல
    • கேடகத்தைப் பிடி நீ - விசுவாசக்
    • கேடகத்தைப் பிடி நீ 

    • அனுபல்லவி
    • வஞ்சனையாகவே பேய் எதிர்த்துன்றனை
    • வன்னிக் கணைதொடுத் தெய்கின்ற வேளையில்,
    • நெஞ்சில் படாமல் தடுக்க அது நல்ல
    • நிச்சயமான பரிசை அறிந்து நீ – கிஞ்சிதமும் 

    • சரணங்கள்
    • 1. பாவத்தை வெறுக்க, ஆபத்தைச் சகிக்க,
    • பத்தியில் தெளிக்கவும், - நித்ய
    • ஜீவனைப் பிடிக்க, லோகத்தை ஜெயிக்க,
    • திறமை அளிக்கவும்,
    • சாவே உன் கூர் எங்கே? பாதாளமே, உன்
    • ஜெயம் எங்கே? என்று நீ கூவிக் களிக்கவும்,
    • தேவன் உகந்துனைத் தான் அங்கீகரிக்க,
    • செய்யவுமே அது திவ்ய நல் ஆயுதம் --- கிஞ்சிதமும்

    • 2. பண்டையர் அந்தப் பரிசையினால் அல்லோ,
    • கண்டடைந்தார் பேறு? - நல்ல
    • தொண்டன் ஆபேல் முதலான வைதீகரைத்
    • தொகுத்து வெவ்வேறு
    • விண்டுரைக்கில் பெருகும் தீ அணைத்ததும்,
    • வீரிய சிங்கத்தின் வாயை அடைத்ததும்,
    • கண்டிதமாய் வெற்றி கொண்டது மாம்பல
    • காரியங்களையும் பார் இது மா ஜெயம் --– கிஞ்சிதமும்

    • 3. ஊற்றமுடன் இப்பரிசைப் பிடித்திட
    • உன் செயல் மா பேதம் - அதின்
    • தோற்றமும் முடிவும் ஏசுபரன் செயல்,
    • துணை அவர் பாதம்
    • ஏற்றர வணைக்கவே பணிவாக
    • இரந்து மன்றாடி அவர் மூலமாகவே,
    • ஆற்றல் செய் தேற்றரவாளி பரிசுத்த
    • ஆவி உதவியை மேவி, அடைந்து நீ --– கிஞ்சிதமும்

  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 214 times