Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

காலையில் தேவனைத் தேடு


    • காலையில் தேவனைத் தேடு
    • பல்லவி
    • காலையில் தேவனைத் தேடு - ஜீவ
    • காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு 

    • அனுபல்லவி
    • சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு ,
    • சீரான நித்திய ஜீவனை நாடு --- காலையில் 

    • சரணங்கள்
    • மன்னுயிர்க்காய் மரித்தாரே - மனு 
    • மைந்தனென நாமம் வைத்திருந்தாரே 
    • உன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணு
    • உள்ளங்கனிந்து தனிஜெபம் பண்ணு --- காலையில்

    • பாவச் சோதனைகளை வெல்லு - கெட்ட 
    • பாருடல் பேயுடன் போருக்கு நில்லு
    • ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்
    • சிந்தனை செய் மனுவேலனைப் பணிய --- காலையில்

    • சிறுவர்கள் என்னிடஞ் சேரத் -தடை 
    • செய்யா திருங்களென்றார் மனதார 
    • பரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும்
    • பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும் --- காலையில்

    • வேலையுனக்குக் கைகூட - சத்ய 
    • வேதன் கிருபை வரத்தை மன்றாட 
    • காலை தேடுவோர் எனைக் கண்டடைவாரே
    • கண்விழித்து ஜெபஞ் செய்யுமென்றாரே --- காலையில்

  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 269 times