Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

சாலேமின் ராசா


    • சாலேமின் ராசா, சங்கையின் ராசா
    • 1. சாலேமின் ராசா, சங்கையின் ராசா, ஸ்வாமி, வாருமேன் - இந்தத்
    • தாரணிமீதினில் ஆளுகை செய்திடச் சடுதி வாருமேன் --- சாலேமின்

    • 2. சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே - இந்தச்
    • சீர்மிகும் மாந்தர்கள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ? --- சாலேமின்

    • 3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக் கண்பூத்துப் போகுதே - நீர்
    • சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே --- சாலேமின்

    • 4. நங்கை எருசலேம்பட்டினம் உம்மை நாடித்தேடுதே - இந்த
    • நானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள் தேடிவாடுதே --- சாலேமின்

    • 5. சாட்சியாகச் சுபவிசேஷம் தாரணிமேவுதே - உந்தச்
    • சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிக் கூவுதே --- சாலேமின்

  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 193 times