Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

தீய மனதை மாற்ற


    • தீய மனதை மாற்ற வாரும்
    • பல்லவி
    • தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே - கன
    • நேய ஆவியே 

    • சரணங்கள்
    • 1. மாயபாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால் - மிக மாயும்
    • பாவி நான் --- தீய 

    • 2. தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே - மருள் 
    • தீர்க்கும், தஞ்சமே --- தீய 

    • 3. பரத்தை நோக்க மனம் அற்றேனே, பதடிதான், ஐயா - ஒரு
    • பாவி நான் ஐயா --- தீய 

    • 4. ஏக்கத்தோடென் மீட்பைத் தேடி இரந்து கெஞ்சவே - தினம்
    • இதயம் அஞ்சவே --- தீய

    • 5. புதிய சிந்தை, புதிய ஆசை புதுப்பித்தாக்கவே - அதைப்
    • புகழ்ந்து காக்கவே --- தீய 

    • 6. கிறிஸ்து மீது நாட்டங் கொண்டு கீதம் பாடவே - அவர்
    • கிருபை தேடவே --- தீய 

    • 7. தேவ வசனப் பாலின்மீது தேட்டம் தோன்றவே - மிகு
    • தெளிவு வேண்டவே --- தீய 

    • 8. ஜெபத்தின் தாகம் அகத்தில் ஊறி ஜெபித்துப் போற்றவே - மிக 
    • சிறப்பாய் ஏற்றவே --- தீய

  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 110 times