Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

காலத்தின் அருமையை


    • காலத்தின் அருமையை அறிந்து 
    • பல்லவி
    • காலத்தின் அருமையை அறிந்து
    • வாழாவிடில் கண்ணீர் விடுவாயே 

    • அனுபல்லவி
    • ஞாலத்தில் பரனுன்னை நாட்டின நோக்கத்தை
    • சீலமாய் நினைத்தவர் மூலம் பிழைத்திடுவாய் 

    • சரணங்கள்
    • 1. மதியை இழந்து தீய வழியிலே நீ நடந்தால்
    • வருங்கோபம் அறிந்திடாயோ?
    • கதியாம் ரட்சண்ய வாழ்வை நீ கண்டு மகிழ்ந்திட
    • காலம் இதுவே நல்ல காலம் என்றறியாயோ? --- காலத்தின்

    • 2. நோவாவின் காலத்தில் நூற்றிருபது ஆண்டு
    • நோக்கிப்பின் அழித்தாரன்றோ?
    • தாவாத கிருபையால் தாங்கி உனக்களித்த
    • தவணையின் காலமிவ் வருட முடியலாமே --- காலத்தின்

    • 3. இகத்தினில் ஊழியம் அகத்தினில் நிறைவேற
    • யேசுனை அழைத்தாரல்லோ,
    • மகத்துவ வேலையை மறந்து தூங்குவாயானால்
    • பகற்கால முடியும் ராக்காலத்திலென்ன செய்வாய்? --- காலத்தின்

    • 4. முந்தின எரேமியா அனனியாவுக் குரைத்த
    • முடிவை நீ அறியாயோ?
    • எந்தக் காலமும் சிரஞ்சீவி யென்றெண்ணிடாமல்
    • ஏற்ற ஆயத்தமாய் எப்போதும் இருந்திடாயோ? --- காலத்தின்
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 491 times