Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

சீர்திரியேக வஸ்தே


    • சீர்திரியேக வஸ்தே, நமோ நமோ
    • பல்லவி
    • சீர்திரியேக வஸ்தே, நமோ நமோ, நின்
    • திருவடிக்கு நமஸ்தே, நமோ நமோ! 

    • அனுபல்லவி
    • பார்படைத்தாளும் நாதா,
    • பரம சற்பிரசாதா,
    • நாருறுந தூயவேதா, நமோ நமோ நமோ! --- சீர் 

    • சரணங்கள்
    • 1. தந்தைப் பராபரனே நமோ நமோ, எமைத்
    • தாங்கி ஆதரிப்போனே - நமோ நமோ!
    • சொந்தக் குமாரன் தந்தாய்,
    • சொல்லரும் நலமீந்தாய்,
    • எந்தவிர் போக்குமெந்தாய், நமோ நமோ நமோ --- சீர்

    • 2. எங்கள் பவத்தினாசா நமோ நமோ, புது
    • எருசலேம் நகர்ராசா நமோ நமோ!
    • எங்கும் நின் அரசேற,
    • எவரும் நின் புகழ்கூற,
    • துங்க மந்தையிற் சேர, நமோ நமோ நமோ --- சீர்

    • 3. பரிசுத்த ஆவிதேவா நமோ நமோ, திட
    • பலமளித் தெமைக்காவா, நமோ நமோ!
    • கரிசித்துத்தா நற்புத்தி,
    • கபடற்ற மனசுத்தி,
    • திருமொழி பற்றும்பக்தி, நமோ நமோ நமோ --- சீர்
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 185 times