Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

தந்தானைத் துதிப்போமே


    • தந்தானைத் துதிப்போமே 
    • பல்லவி
    • தந்தானைத் துதிப்போமே - திருச் 
    • சபையாரே, கவி - பாடிப்பாடி. 

    • அனுபல்லவி
    • விந்தையாய் நமக்கனந்தனந்தமான, 
    • விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத் --- தந்தானைத் 

    • சரணங்கள்
    • 1. ஒய்யாரத்துச் சீயோனே - நீயும்
    • மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து, 
    • ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி
    • செய்குவையே, மகிழ் கொள்ளுவையே, நாமும் --- தந்தானைத்

    • 2. கண்ணாரக் களித்தாயே - நன்மைக் 
    • காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து 
    • எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
    • இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே --- தந்தானைத்

    • 3. சுத்தாங்கத்து நற்சபையே - உனை 
    • முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து 
    • சத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின் 
    • ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம் --- தந்தானைத்

    • 4. தூரம் திரிந்த சீயோனே - உனைத் 
    • தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி, 
    • ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நினை 
    • அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை! --- தந்தானைத் 

    • 5. சிங்காரக் கன்னிமாரே, - உம்
    • அலங்காரக் கும்மி அடித்துப் படித்து,
    • மங்காத உம் மணவாளன் யேசுதனை 
    • வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும் --- தந்தானைத் 

    • methotrexat grapefruit forstoppelseburp.site methotrexat 7 5
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 84 times