Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

தேவா, இரக்கம் இல்லையோ


    • தேவா, இரக்கம் இல்லையோ?
    • பல்லவி
    • தேவா, இரக்கம் இல்லையோ? - இயேசு 
    • தேவா, இரக்கம் இல்லையோ? 

    • அனுபல்லவி
    • ஜீவா, பரப்ரமஏ கோவா, திரித்துவத்தின் 
    • மூவாள் ஒன்றாக வந்த தாவீதின் மைந்தன் , ஒரே --- தேவா 

    • சரணங்கள்
    • 1. எல்லாம் அறிந்த பொருளே - எங்கள் 
    • இல்லாமை நீக்கும் அருளே - கொடும்
    • பொல்லா மனதுடைய கல்லான பாவிகளைக்
    • கொல்லாதருள் புரியும் நல்லாயன் யேசுநாதர்! --- தேவா

    • 2. எங்கும் நிறைந்த ஜோதியே - ஏழைப்
    • பங்கில் உறைந்த நீதியே - எங்கள் 
    • சங்கடமான பாவ சங்கதங்களை நீக்கும்
    • துங்க இசரவேலின் வங்கிஷ க்ரீடாபதி ! --- தேவா 

    • 3. வேதாந்த வேத முடிவே - ஜெக
    • ஆதாரம் ஆன வடிவே - ஐயா,
    • தாதாவும் எமைப் பெற்ற மாதாவும் நீயே - யேசு
    • நாதா, ரட்சியும், வேறே ஆதாரம் எமக்கில்லை --- தேவா 
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 103 times