Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

தேன் இனிமையிலும்


    • தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம் 
    • பல்லவி
    • தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம் 
    • திவ்விய மதுரமாமே - அதைத் 
    • தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே 

    • சரணங்கள்
    • 1. காசினிதனிலே நேசமதாகக் 
    • கஷ்டத்தை உத்தரித்தே - பாவக் 
    • கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார் 
    • கண்டுனர் நீ மனமே --- தேன் 

    • 2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத் 
    • தாமே ஈந்தவராம் - பின்னும் 
    • நேமியாம் கருணை நிலைவரமுண்டு 
    • நிதம் துதி மனமே --- தேன் 

    • 3. காலையில் பனிபோல் மாயமாய் யாவும் 
    • உபாயமாய் நீங்கிவிடும் - என்றும் 
    • கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு 
    • கருத்தாய் நீ, மனமே --- தேன் 

    • 4. துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல 
    • துணைவராம் நேசரிடம் - நீயும் 
    • அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துனைக் காப்பார் 
    • ஆசை கொள் நீ மனமே --- தேன் 

    • 5. பூலோகத்தாரும் மேலோகத்தாரும் 
    • புகழ்ந்து போற்று நாமம் - அதைப் 
    • பூண்டுகொண்டால்தான் பொன்னகர் வாழ்வில் 
    • புகுவாய் நீ மனமே --- தேன் 

  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 93 times