Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

கிருபையிதே


    • கிருபையிதே தேவ கிருபையிதே 
    • கிருபையிதே தேவ கிருபையிதே
    • தாங்கி நடத்தியதே
    • இயேசுவிலே பொன் நேசரிலே
    • அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம் 

    • 1. ஆருயிர் அன்பராய் எங்களுடனே
    • ஜீவிய பாதையிலே - இயேசுபரன்
    • அனுதினமும் வழி நடந்தே
    • அவரது நாமத்தில் காத்தனரே --- கிருபையிதே

    • 2. எத்தனையோ பரிசுத்தர்கள் மறைந்தே
    • மகிமை சேர்ந்தனரே - பூரணமாய்
    • காத்தனரே கர்த்தர் எமை 
    • கருணையினால் தூய சேவை செய்ய --- கிருபையிதே

    • 3. அன்பின் அகலமும் நீளம் உயரமும்
    • ஆழமும் அறிந்துணர - அனுக்கிரகித்தார்
    • கிறிஸ்துவிலே ஒரு மனையாய்
    • சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய் --- கிருபையிதே

    • 4. நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே
    • நித்திய ஜீவனை நாம் - பெற்றிடவே
    • விசுவாசத்தில் நிலைத்திடுவோம்
    • அசையாது அழைப்பினை காத்துக்கொள்வோம் --- கிருபையிதே

    • 5. ஆவியும் மணவாட்டியும் ஆவலுடன்
    • வாருமென்றழைக்கின்றாரே - வாருமென்பீர்
    • சீயோனே நீ பார் உனக்காய்
    • நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார் --- கிருபையிதே

    • 6. வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன்
    • வியாதியும் வேதனையும் - வைத்தியராய்
    • இயேசுவல்லால் சார்ந்திடவோ
    • இகமதில் வேறெமக் காருமில்லை --- கிருபையிதே

    • rigevidon reddit rigevidon risks rigevidon quantity
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 87 times