Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

சத்திய வேதம்


    • சத்திய வேதம் பக்தரின் கீதம்
    • பல்லவி
    • சத்திய வேதம் பக்தரின் கீதம்
    • சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்
    • உத்தம மார்க்கம் காட்டும் 

    • அனுபல்லவி
    • எத்தனை துன்பம் துயரம் வந்தும்
    • பக்தனைத் தேற்றிடும் ஔஷதம் 

    • சரணங்கள்
    • 1. நித்தம் விரும்பும் கர்த்தர் வசனம்
    • சுத்தம் பசும்பொன் தெளிந்திடும் தேன்
    • இதயம் மகிழும் கண்கள் தெளியும்
    • இருண்ட ஆத்மா உயிரடையும்

    • 2. பேதைகளிடம் ஞானம் அருளும்
    • வேத புத்தகம் மேன்மை தரும்
    • இரவும் பகலும் இதன் தியானம்
    • இனிமை தங்கும் தனிமையிலும்

    • 3. வேதப் பிரியர் தேவ புதல்வர்
    • சேதமடையா நடந்திடுவார்
    • இலைகள் உதிரா மரங்கள் போல
    • இவர்கள் நல்ல கனி தருவார்

    • 4. உள்ளம் உதிக்கும் உறுதி அளிக்கும்
    • கள்ளங் கபடெல்லாம் அகற்றும்
    • கடிந்துக் கொள்ளும் கறைகள் போக்கும்
    • கனமடைய வழி நடத்தும்

    • 5. கர்த்தர் வசனம் வல்ல சம்மட்டி
    • கன் மலையையும் நொறுக்கிடுமே
    • இதய நினைவை வகையாய் அறுக்கும்
    • இரு புறமும் கருக்குள்ளதே

    • 6. வானம் அகலும் பூமி அழியும்
    • வேத வசனம் நிலைத்திருக்கும்
    • பரமன் வேதம் எனது செல்வம் 
    • பரவசம் நிதம் அருளும்
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 150 times