Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

சந்தோஷம் பொங்குதே


    • சந்தோஷம் பொங்குதே
    • சந்தோஷம் பொங்குதே (2)
    • சந்தோஷம் என்னில் பொங்குதே
    • இயேசு என்னை இரட்சித்தார்
    • முற்றும் என்னை மாற்றினார்
    • சந்தோஷம் பொங்கிப் பொங்குதே 

    • 1. வழி தப்பி நான் திரிந்தேன் - பாவப்
    • பழியதைச் சுமந்தலைந்தேன்
    • அவர் அன்புக் குரலே
    • அழைத்தது என்னையே
    • அந்த இன்ப நாளில் எந்தன்
    • பாவம் நீங்கிற்றே --- சந்தோஷம்

    • 2. சத்துரு சோதித்திட தேவ
    • உத்திரவுடன் வருவான்
    • ஆனால் இயேசு கைவிடார்
    • தானாய் வந்து இரட்சிப்பார்
    • இந்த நல்ல ஏசு எந்தன்
    • சொந்தமானாரே --- சந்தோஷம்

    • 3. பாவத்தில் ஜீவிப்பவர்
    • பாதாளத்தில் அழிந்திடுவார்
    • அவரும் பரலோகத்தில்
    • ஆண்டவரோடு வாழவே
    • நானும் தேவ அன்பையே
    • நாளும் கூறிடுவேன் --- சந்தோஷம்
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 171 times