Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

சிலுவை சுமந்த உருவம்


    • சிலுவை சுமந்த உருவம்
    • பல்லவி
    • சிலுவை சுமந்த உருவம்
    • சிந்தின இரத்தம் புரண்டோடியே
    • நதிபோலவே பாய்கின்றதே
    • நம்பி இயேசுவண்டை வா 

    • 1. பொல்லா உலக சிற்றின்பங்கள்
    • எல்லாம் அழியும் மாயை
    • காணாய் நிலையான சந்தோஷம் பூவில்
    • கர்த்தாவின் அன்பண்டைவா --- சிலுவை

    • 2. ஆத்தும மீட்பைப் பெற்றிடாமல்
    • ஆத்துமம் நஷ்டமடைந்தால்
    • லோகம் முழுவதும் ஆதாயமாக்கியும்
    • லாபம் ஒன்றுமில்லையே --- சிலுவை

    • 3. பாவ மனித ஜாதிகளைப்
    • பாசமாய் மீட்க வந்தார்
    • பாவப் பரிகாரி கர்த்தர் இயேசுநாதர்
    • பாவமெல்லாம் சுமந்தார் --- சிலுவை

    • 4. நித்திய ஜீவன் வாஞ்சிப்பாயோ
    • நித்திய மோட்ச வாழ்வில்
    • தேடி வாரோயோ பரிசுத்த ஜீவியம்
    • தேவை அதை அடைவாய் --- சிலுவை

    • 5. தாகமடைந்தோர் எல்லோருமே
    • தாகத்தை தீர்க்க வாரும்
    • ஜீவத் தண்ணீரான கர்த்தர் இயேசுநாதர்
    • ஜீவன் உமக்களிப்பார் --- சிலுவை

  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 151 times