Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

தந்தேன் என்னை இயேசுவே


    • தந்தேன் என்னை இயேசுவே
    • பல்லவி
    • தந்தேன் என்னை இயேசுவே
    • இந்த நேரமே உமக்கே 

    • அனுபல்லவி
    • உந்தனுக்கே ஊழியஞ் செய்யத்
    • தந்தேன் என்னைத் தாங்கியருளும் --- தந்தேன் 

    • சரணங்கள்
    • 1. ஜீவ காலம் முழுதும்
    • தேவ பணி செய்திடுவேன்
    • பூவில் கடும் போர் புரிகையில்
    • காவும் உந்தன் கரத்தினில் வைத்து --- தந்தேன்

    • 2. உலகோர் என்னை நெருக்கிப்
    • பலமாய் யுத்தம் செய்திடினும்
    • நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு
    • நானிலத்தினில் நாதா வெல்லுவேன் --- தந்தேன்

    • 3. உந்தன் சித்தமே செய்வேன்
    • எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்
    • எந்த இடம் எனக்குக் காட்டினும்
    • இயேசுவே அங்கே இதோ போகிறேன் --- தந்தேன்

    • 4. கஷ்டம் நஷ்டம் வந்தாலும்
    • துஷ்டர் கூடிச் சூழ்ந்திட்டாலும்
    • அஷ்டதிக்கும் ஆளும் தேவனே
    • அடியேன் உம்மில் அமரச் செய்திடும் --- தந்தேன்

    • 5. ஒன்றுமில்லை நான் ஐயா
    • உம்மாலன்றி ஒன்றும் செய்யேன்
    • அன்று சீஷர்களுக்களித்த ஆவியால்
    • இன்றே அடியேனை நிரப்பும் --- தந்தேன்

  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 111 times