Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

தேவ கிருபை என்றுமுள்ளதே


    • தேவ கிருபை என்றுமுள்ளதே 
    • பல்லவி
    • தேவ கிருபை என்றுமுள்ளதே
    • அவர் கிருபை என்றுமுள்ளதே
    • அவரைப் போற்றித் துதித்துப் பாடி
    • அல்லேலூயா என்றார்ப்பரிப்போம் 

    • சரணங்கள்
    • 1. நெருக்கப்பட்டும் மடிந்திடாமல்
    • கர்த்தர் தாம் நம்மைக் காத்ததாலே
    • அவர் நல்லவர் அவர் வல்லவர்
    • அவர் கிருபை என்றுமுள்ளது --- தேவ கிருபை

    • 2. சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில்
    • பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு
    • முன் சென்றாரே அவர் நல்லவர்
    • அவர் கிருபை என்றுமுள்ளது --- தேவ கிருபை

    • 3. காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்
    • பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய்
    • என்னை நடத்தினார் அவர் நல்லவர்
    • அவர் கிருபை என்றுமுள்ளதே --- தேவ கிருபை

    • 4. வெள்ளம் போல் நிந்தை மேற்கொள்ள வந்தும்
    • வீரன் நெகேமியா ஆவியை அளித்தே
    • திட நம்பிக்கை தைரியம் ஈந்தாரே
    • அவர் கிருபை என்றுமுள்ளதே --- தேவ கிருபை

    • 5. நித்திய தேவனாம் சத்திய பரன்தான்
    • நித்தமும் நம்முடன் இருப்பதாலே
    • அவர் நல்லவர் என்றும் துதியுங்கள்
    • அவர் கிருபை என்றுமுள்ளதே --- தேவ கிருபை
    • methotrexat grapefruit methotrexat folsyre methotrexat 7 5
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 142 times