Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

தோத்திரம் பாடியே போற்றிடுவேன்


    • தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
    • பல்லவி 
    • தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
    • தேவாதி தேவனை ராஜாதி ராஜனை
    • வாழ்த்தி வணங்கிடுவேன் 

    • சரணங்கள்
    • 1. அற்புதமான அன்பே --- என்னில்
    • பொற்பரன் பாராட்டும் தூய அன்பே
    • என்றும் மாறா தேவ அன்பே
    • என்னுள்ளம் தங்கும் அன்பே --- தோத்திரம்

    • 2. ஜோதியாய் வந்த அன்பே --- பூவில்
    • ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே
    • தியாகமான தேவ அன்பே
    • திவ்விய மதுர அன்பே --- தோத்திரம்

    • 3. மாய உலக அன்பை நம்பி
    • மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே
    • என்னை வென்ற தேவ அன்பே
    • என்னில் பொங்கும் பேரன்பே --- தோத்திரம்

    • 4. ஆதரவான அன்பே --- நித்தம்
    • அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே
    • உன்னதமாம் தேவ அன்பே
    • உள்ளம் கவரும் அன்பே --- தோத்திரம்

    • 5. வாக்கு மாறாத அன்பே --- திரு
    • வார்த்தையுரைத் தென்னைத் தேற்றும் அன்பே
    • சர்வ வல்ல தேவ அன்பே
    • சந்ததம் ஓங்கும் அன்பே --- தோத்திரம்

  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 90 times