Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

திருப்பாதம் நம்பி வந்தேன்


    • திருப்பாதம் நம்பி வந்தேன்
    • திருப்பாதம் நம்பி வந்தேன்
    • கிருபை நிறை இயேசுவே
    • தமதன்பைக் கண்டடைந்தேன்
    • தேவ சமூகத்திலே 

    • சரணங்கள்
    • 1. இளைப்பாறுதல் தரும் தேவா
    • களைத்தோரை தேற்றிடுமே
    • சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
    • சுகமாய் அங்கு தங்கிடுவேன்

    • 2. என்னை நோக்கி கூப்பிடு என்றீர்
    • இன்னல் துன்ப நேரத்திலும்
    • கருத்தாய் விசாரித்து என்றும்
    • கனிவோடென்னை நோக்கிடுமே

    • 3. மனம் மாற மாந்தன் நீரல்ல
    • மனவேண்டுதல் கேட்டிடும்
    • எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
    • இயேசுவே உம்மை அண்டிடுவேன்

    • 4. என்னைக் கைவிடாதிரும் நாதா
    • என்ன நிந்தை நேரிடினும்
    • உமக்காக யாவும் சகிப்பேன்
    • உமது பலன் ஈந்திடுமே

    • 5. உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே
    • உண்மையாய் வெட்கம் அடையேன்
    • தமது முகப் பிரகாசம்
    • தினமும் என்னில் வீசிடுதே

    • 6. சத்துரு தலை கவிழ்ந்தோட
    • நித்தமும் கிரியை செய்திடும்
    • என்னைத் தேற்றிடும் அடையாளம்
    • இயேசுவே இன்று காட்டிடுமே
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 188 times