Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

தேவ கிருபை ஆசீர்வாதம்


    • தேவ கிருபை ஆசீர்வாதம்
    • பல்லவி 
    • தேவ கிருபை ஆசீர்வாதம்
    • தினமும் எங்களில் பெருகிட 

    • சரணங்கள்
    • 1. ஆவலாயும தோய்வு நாளில்
    • ஆலயந்தனில் பணிந்து புகழ
    • பாவ அறிக்கை செய்யும் ஜனங்கள்
    • பரனின் கிருபை பெற்று மகிழ --- தேவ

    • 2. ஆவலாய் எங்கள் ஆண் குழந்தைகள்
    • அழகான இள மரங்கள் போலவும்
    • பாவையர்களாம் பெண் குழந்தைகள்
    • பலத்த சித்திர அரண்கள் போலவும் --- தேவ

    • 3. எங்கள் பண்டக சாலை சகல
    • இன்ப வஸ்துக்கள் நிறைந்திருக்கவும்
    • பங்க வலசை பகலின் கூக்குரல்
    • பதியில் என்று மில்லாதிருக்கவும் --- தேவ

    • 4. எங்கள் மாடுகள் பலத்திருக்கவும்
    • இடுக்கணுள்ளே வராதிருக்கவும்
    • எங்கள் ஆடுகள் கிராமங்களிலே
    • லட்சங் கோடியாய்ப் பெருகி வரவும் --- தேவ

    • 5. ஆலயந்தனில் உமது வசனம்
    • அறிவிக்கும் போதக ரனைவருக்குள்ளும்
    • வேலை ஓய்ந்து பணியும் சபையார்
    • விரும்பிப் படிக்கும் சகலருக்குள்ளும் --- தேவ

    • 6. இத்தன்மையுடன் இருக்கும் ஜனங்கள்
    • இவர்கள் தாமென உலகம் சொல்லவும்
    • கர்த்தர் தெய்வமென் றிருக்கும் பாக்கியம்
    • கண்ட ஜனமென் றெம்மைச் சொல்லவும் --- தேவ

    • 7. உன்னதங்களின் இருக்கும் தெய்வத்தின்
    • உயர்ந்த நாமம் மகிமைப்படவும்
    • இந்நிலம் சமாதானம் பெற்றிட
    • இஷ்டம் மானிடர் மேலுண்டாகவும் --- தேவ

    • 8. இந்த வீட்டுக்குச் சமாதானம்
    • இன்ப சுகங்கள் அனைத்துண்டாகவும்
    • சந்ததியாய் நீடூழி வாழவும்
    • சபை யனைவரும் துதித்திப் பாடவும் --- தேவ
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 148 times