Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஆனந்தமே பரமானந்தமே


    • ஆனந்தமே பரமானந்தமே
    • பல்லவி 
    • ஆனந்தமே பரமானந்தமே - இயேசு
    • அண்ணலை அண்டினோர்க் கானந்தமே 

    • சரணங்கள்
    • 1. இந்தப் புவி ஒரு சொந்தம் அல்ல என்று 
    • இயேசு என் நேசர் மொழிந்தனரே 
    • இக்கட்டும் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்கு
    • இங்கேயே பங்காய் கிடைத்திடினும் --- ஆனந்தமே

    • 2. கர்த்தாவே நீர் எந்தன் காருண்ய கோட்டையே
    • காரணமின்றி கலங்கேனே நான்
    • விஸ்வாசப் பேழையில் மேலோகம் வந்திட
    • மேவியே சுக்கான் பிடித்திடுமே --- ஆனந்தமே

    • 3. என்னுள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்?
    • கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது!
    • சீயோன் நகரத்தில் சீக்கிரம் சென்று நாம்
    • ஜெய கீதம் பாடி மகிழ்ந்திடலாம் --- ஆனந்தமே

    • 4. கூடார வாசிகளாகும் நமக்கிங்கு
    • வீடென்றும் நாடென்றும் சொல்லலாமோ?
    • கைவேலையில்லாத வீடொன்றை மேலேதான்
    • செய்வேன் எனச் சொல்லிப் போகலையோ --- ஆனந்தமே

    • 5. துன்பங்கள் தொல்லை இடுக்கண் இடர் இவை
    • தொண்டர் எமை அண்டி வந்திடுனும்
    • சொல்லி முடியாத ஆறுதல் கிருபையை
    • துன்பத்தினூடே அனுப்பிடுவார் --- ஆனந்தமே

    • 6. இயேசுவே சீக்கிரம் இத்தரை வாருமேன்
    • ஏழை வெகுவாய்க் கலங்குகிறேனே
    • என் நேசர் தன் முக ஜோதியதேயல்லாமல்
    • இன்பம் தரும் பொருள் ஏதுமில்லை --- ஆனந்தமே

  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 8879 times