Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஆனந்தமாய் இன்பக் கானான்


    • ஆனந்தமாய் இன்பக் கானான்
    • பல்லவி
    • ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்
    • தூய பிதாவின் முகம் தரிசிப்பேன் 

    • அனுபல்லவி
    • நாளுக்கு நாள் அற்புதமாய் என்னைத் தாங்கிடும்
    • நாதன் இயேசு என்னோடிருப்பார் 

    • சரணங்கள்
    • 1. சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்து 
    • மாற்றி உள்ளம் புதிதாக்கினாரே 
    • கல்லான என் உள்ளம் உருக்கின கல்வாரியைக்
    • கண்டு நன்றியுடன் பாடிடுவேன் --- ஆனந்தமாய்

    • 2. வாலிப நாளில் இயேசுவைக் கண்டேன் 
    • வாஞ்சையுடன் என்னைத் தேடி வந்தார்
    • எதற்குமே உதவா என்னையும் கண்டெடுத்தார்
    • இயேசுவின் அன்பை நான் என் சொல்லுவேன் --- ஆனந்தமாய்

    • 3. கர்த்தரின் சித்தம் செய்திட நித்தம்
    • தத்தம் செய்தே என்னை அர்ப்பணித்தேன்
    • இயேசு அல்லால் ஆசை இப்பூவினில் வேறே இல்லை
    • என்றும் எனக்கவர் ஆதரவே --- ஆனந்தமாய் 

    • 4. உம்மைப் பின் சென்று ஊழியம் செய்து
    • உம்பாதம் சேர வாஞ்சிக்கிறேன்
    • தாரும் தேவா ஏழைக்கும் மாறாத உம் கிருபை
    • கண் பாரும் என்றும் நான் உம் அடிமை --- ஆனந்தமாய்

    • 5. தேற்றிடுதே உம் வாக்குகள் என்னை
    • ஆற்றிடுதே உந்தன் சமூகமே
    • பெலத்தின் மேல் பெலனடைந்து நான் சேருவேன்
    • பேரின்ப சீயோனில் வாழ்ந்திடுவேன் --- ஆனந்தமாய்
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 1953 times