Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

இயேசுவை நாம் எங்கே காணலாம்


    • இயேசுவை நாம் எங்கே காணலாம்
    • பல்லவி
    • இயேசுவை நாம் எங்கே காணலாம்
    • அவர் பேசுவதை எங்கே கேட்கலாம் 

    • அனுபல்லவி
    • பனி படர்ந்த மலையின் மேல் பாக்க முடியுமா ?
    • கனி நிறைந்த சோலையின் நடுவே காண முடியுமோ ? 

    • சரணங்கள்
    • 1. ஓடுகின்ற அருவியெல்லாம் தேடி அலைந்தேனே 
    • ஆடுகின்ற அலைகடலில் நாடி அயர்ந்தேனே 
    • தேடுகின்ற என் எதிரே தெய்வத்தைக் காணேனே
    • பாடுபடும் ஏழை நான் அழுது வாடினேனே --- இயேசுவை

    • 2. வானமதில் பவனி வரும் கார்முகில் கூட்டங்களே 
    • வந்தருளும் இயேசுவையே காட்டிட மாட்டீரோ
    • காலமெல்லாம் அவனியின்மேல் வீசிடும் காற்றே நீ
    • கர்த்தர் இயேசு வாழுமிடம் கூறிட மாட்டாயோ --- இயேசுவை

    • 3. கண்ணிரண்டும் புனலாக நெஞ்சம் அனலாக
    • மண்டியிட்டு வீழ்ந்தேன் நான் திருமறைமுன்பாக
    • விண்ணரசர் அன்புடனே கண்விழிப்பாய் என்றார்
    • கண்விழித்தேன் என் முன்னே கர்த்தர் இயேசு நின்றார் --- இயேசுவை 

  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 1151 times