Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

அன்பே ! அன்பே ! அன்பே !


    • அன்பே ! அன்பே ! அன்பே !
    • பல்லவி 
    • இயேசுவின் நாமம் இனிதான நாமம்
    • இணையில்லா நாமம் இன்ப நாமம் 

    • சரணங்கள்
    • 1. பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும் 
    • பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் --- இயேசுவின்

    • 2. பரிமள தைலமாம் இயேசுவின் நாமம் 
    • பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம் --- இயேசுவின்

    • 3. வானிலும் பூவிலும் மேலான நாமம்
    • வானாதி வானவர் இயேசுவின் நாமம் --- இயேசுவின்

    • 4. நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்
    • நம்பினோரை என்றும் கைவிடா நாமம் --- இயேசுவின்

    • 5. முழங்கால் யாவும் முடக்கிடும் நாமம்
    • மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம் --- இயேசுவின்

    • 6. சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்
    • சாபப் பிசாசை துரத்திட்ட நாமம் --- இயேசுவின்

  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 731 times