Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

உருகாயோ நெஞ்சமே


    • உருகாயோ நெஞ்சமே
    • பல்லவி 
    • உருகாயோ நெஞ்சமே
    • குருசினில் அந்தோபார்
    • கரங்கால்கள் ஆணியேறித்
    • திருமேனி நையுதே 

    • சரணங்கள்
    • 1. திண்டு போல எண்டிசையின் 
    • தொண்டர் பாவம் ஆண்டான் மேலே 
    • நின்றதே ஓர் பண்டு ஏவை
    • தின்ற சாபம் மண்டுதே --- உருகாயோ

    • 2. தாகம் மிஞ்சி நாவறண்டு 
    • தங்க மேனி மங்குதே
    • ஏகபரன் கண்ணயர்ந்து 
    • எத்தனையாய் ஏங்குறார்! --- உருகாயோ

    • 3. வல்ல பேயை வெல்ல வானம்
    • விட்டு வந்த தெய்வம் பாராய்!
    • புல்லரிதோ நன்றி கெட்டு
    • புறம்பாக்கினாரன்றோ! --- உருகாயோ

    • 4. மன்னுயிர்க்காய் தன்னுயிரை
    • மாய்க்க வந்த மன்னவனார்
    • இந்நில மெல்லாம் புரக்க
    • ஈனக்குரு சேறினார்! --- உருகாயோ

    • 5. மூவுலகும் தாங்கும் தேவன்
    • மூன்று ஆணி தாங்கிடவோ
    • சாகும் வேளை வந்த போது
    • சிலுவையில் தொங்கினார்! --- உருகாயோ

    • 6. நித்திய காலம் பாத்திரராய்
    • நீசர் வாசஸ்தலம் உய்ய
    • சத்திய தாசர் சித்தமேவும்
    • சங்கை ராஜன் இங்கு பார்! --- உருகாயோ
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 327 times