Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

உன்னதமானவரின்


    • உன்னதமானவரின்
    • 1. உன்னதமானவரின் - உயர் மறைவிலிருக்கிறவன்
    • சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
    • இது பரம சிலாக்கியமே 

    • பல்லவி
    • அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
    • தம் சிறகுகளால் மூடுவார் 

    • 2. தேவன் என் அடைக்கலமே
    • என் கோட்டையும் அரணுமவர்
    • அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
    • என் நம்பிக்கையும் அவரே --- அவர்

    • 3. இரவின் பயங்கரத்துக்கும்
    • பகலில் பறக்கும் அம்புக்கும்
    • இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
    • நான் பயப்படவே மாட்டேன் --- அவர்

    • 4. ஆயிரம் பதினாயிரம்
    • பேர்கள் உன் பக்கம் விழுந்தாலும்
    • அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே
    • உன் தேவன் உன் தாபரமே --- அவர்

    • 5. தேவன் உன் அடைக்கலமே
    • ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ
    • ஒரு வாதையும் உன் கூடாரத்தையே
    • அணுகாமலே காத்திடுவார் --- அவர்

    • 6. உன் வழிகளிலெல்லாம்
    • உன்னைத் தூதர்கள் காத்திடுவார்
    • உன் பாதம் கல்லில் இடறாதபடி
    • தங்கள் கரங்களில் ஏந்திடுவார் --- அவர்

    • 7. சிங்கத்தின் மேலும் நடந்து
    • வலுசர்ப்பத்தையும் மிதிப்பாய்
    • அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
    • உன்னை விடுவித்து காத்திடுவார் --- அவர்

    • 8. ஆபத்திலும் அவரை நான்
    • நோக்கிக் கூப்பிடும் வேளையிலும்
    • என்னை தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே
    • என் ஆத்தும நேசரவர் --- அவர்

    • toilax 5mg bhalsbrand.site toilax spc
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 1172 times