Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

உம்மைத் துதிப்பேன்


    • உம்மைத் துதிப்பேன்
    • பல்லவி 
    • உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே
    • உம் கிரியைகள் மிக அற்புதமானதே
    • உம்மைப் பணிவேன் தேவாதி தேவனே
    • உம் ஆலோசனைகள் அருமையானதே 

    • சரணங்கள்
    • 1. என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்
    • என் நினைவையும் தூரத்தில் அறிவீர்
    • எந்தன் நாவில் சொல் பிறவா முன்னமே
    • எந்தன் தேவனே அவையாவும் அறிவீர்

    • 2. உமக்கு மறைவாய் இருளும் மூடாதே
    • இரவும் பகல் போல் வெளிச்சமாகுமே
    • உமது கரத்தை என்மேல் வைக்கிறீர்
    • இந்த அறிவுதான் மா விந்தையானதே

    • 3. வானில் சென்றாலும் அங்கேயும் இருக்கிறீர்
    • விடியற்காலத்துச் செட்டையில் பறந்தாலும்
    • பாதாளத்திலே படுக்கை போட்டாலும்
    • உமது கரத்தால் என்னைப் பிடிக்கிறீர்

    • 4. என்னை ஆராய்ந்து அறிந்து கொள்ளுமே
    • வேதனை வழி என்னின்று அகல
    • நித்ய வழியிலே என்னை நடத்துமே
    • எந்தையே எந்தன் உள்ளம் பாடிட
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 355 times