Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

என் ஆத்தும நேசர்


    • என் ஆத்தும நேசர் இயேசுவை
    • என் ஆத்தும நேசர் இயேசுவை
    • நான் அண்டிக் கொள்வேனே (4) 

    • 1. நிலையில்லா என்னைக் கண்டிட்டார்
    • நித்திய வழிக்குள் நடத்திட்டார்
    • விலையில்லா இரத்தம் சிந்தினார்
    • விந்தையாய் என்னைச் சந்தித்தார் 

    • பரகதி வாழ்வை தந்தவர்
    • பரமன் இயேசு கர்த்தரே
    • நித்திய வழிக்குள் நடத்தியவர்
    • நிதம் அவர் துதி நான் பாடிடுவேன்
    • அல்லேலூயா அல்லேலூயா -- அல்லேலூயா --- என் 

    • 2. பாவத்தை கழுவி பரிகரித்தார்
    • சாபத்தை நீக்கி சங்கரித்தார்
    • லாபம் இன்றென் ஜீவனே
    • தாபம் எனக்கினி அவர்தானே --- பரகதி

    • 3. என்னையே மீட்க என் இயேசு
    • தன்னையே தியாகம் செய்தாரே
    • அன்னையாய் அப்பனாய் ஆனவர்
    • உன்னையும் அன்பாய் அழைக்கிறார் --- பரகதி
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 370 times