Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

குதூகலம் நிறைந்த நன்னாள்


    • குதூகலம் நிறைந்த நன்னாள்
    • பல்லவி 
    • குதூகலம் நிறைந்த நன்னாள்
    • நடுவானில் மின்னிடுமே
    • இதுவரை இருந்த துன்பமில்லை
    • இனி என்றுமே ஆனந்தம் 

    • 1. தள கர்த்தனாம் இயேசு நின்று
    • யுத்தம் செய்திடுவார் நன்று
    • அவர் ஆவியினால் புது பெலனடைந்து
    • ஜெயகீதங்கள் பாடிடுவோம் --- குதூகலம்

    • 2. புவி மீதினில் சரீர மீட்பு
    • என்று காண்போம் என ஏங்கும்
    • மன மகிழ்ந்திடவே அவர் வந்திடுவார்
    • மணவாட்டியாய்ச் சேர்த்திடவே --- குதூகலம்

    • 3. ஜெப விழிப்புடன் வாஞ்சையாக
    • அவர் வருகையை எதிர் நோக்கி
    • நவ எருசலேமாய் தூயாலங்கிர்தமாய்
    • நாம் ஆயத்தமாகிடுவோம் --- குதூகலம்

    • 4. ஜீவ ஒளி வீசும் கற்களாக
    • சீயோன் நகர்தனிலே சேர்க்க
    • அருள் சுரந்திருந்தார் நாமம் வரைந்திருந்தார்
    • அவர் மகிமையில் ஆர்ப்பரிப்போம் --- குதூகலம்

    • 5. தேவ தூதர்கள் கானமுடன்
    • ஆரவார தொனி கேட்கும்
    • அவர் கிருபையினால் மறுரூபமாக
    • நம்மை இனிதுடன் சேர்த்திடுவார் --- குதூகலம்

  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 104 times