Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

தூயாதி தூயவரே!


    • தூயாதி தூயவரே! 
    • பல்லவி
    • தூயாதி தூயவரே! உமது புகழை நான் பாடுவேன் 

    • அனுபல்லவி
    • பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
    • உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் --- தூயாதி 

    • சரணங்கள்
    • 1. சீடரின் கால்களைக் கழுவினவர்
    • செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே! --- பாரில்

    • 2. பாரோரின் நோய்களை நீக்கினவர்
    • பாவி என் பாவ நோய் நீக்கினீரே! --- பாரில்

    • 3. துயரங்கள் பாரினில் அடைந்தவரே
    • துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே! --- பாரில்

    • 4. பரலோகில் இடமுன்று என்றவரே
    • பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே! --- பாரில்

  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 416 times